கோயம்புத்தூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசித்து வந்தவர் பாலமுருகன் (41). இவரது மனைவி மஞ்சுளா. பாலமுருகனுக்கு கடந்த சில தினங்களாக கால் வலி மற்றும் மன அழுத்தம் காரணமாக அவதியுற்று வந்துள்ளார். அதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் பாலமுருகன் மற்றும் மஞ்சுளா இருவரும், நேற்று முன்தினம் (ஜன.26) மீண்டும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
சிகிச்சை முடித்துவிட்டு பேருந்து மூலம் ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது சிங்காநல்லூர் சாலை வரதராஜா மில்க் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். அந்த நேரத்தில் பாலமுருகன் நொடிப்பொழுதில் மனைவியின் கண்முன்னே தற்கொலை செய்துகொண்டார்.