கோவை:சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (24). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் நிவேதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கணேசனுக்கு தெரிய வர, நிவேதாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காமல் நிவேதா தொடர்ந்து முருகனுடன் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பணி முடித்து கணேசன் வீடு திரும்பியபோது, நிவேதாவுடன் முருகன் தனிமையில் இருந்ததாகவும், கணேசனைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணேசன், நிவேதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு கணேசன் தனது காதல் மனைவியை உடல் முழுவதும் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றார்.