தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன்! - கோவை மாவட்ட செய்திகள்

கோவை: ஈச்சனாரி அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, எரித்த கணவனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

husband-poured-kerosene-on-his-wife-during-a-family-dispute
husband-poured-kerosene-on-his-wife-during-a-family-dispute

By

Published : May 27, 2020, 1:36 AM IST

கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள கணேசபுரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சேட்லால் என்பவர், தனது மனைவி சகுந்தலாவுடன் வசித்து வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம் போல் கணவன் - மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மீது வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி, தீயைக் கொளுத்தியுள்ளார். இதையடுத்து வலி தாங்காமல் கூச்சலிட்ட சகுந்தலாவை, அக்கம்பக்கத்தினர் நீரை ஊற்றிக் காப்பாற்றி, அவர் உடல் மீது பரவிய தீயை அணைத்துள்ளனர்.

இருப்பினும் இதில் படுகாயமடைந்த சகுந்தலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது சேட் லாலிற்கும் கையில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து தகவலறிந்த வந்த காவல் துறையினர் சேட் லாலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.

பின் இது தொடர்பாக சேட் லால் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மருத்துவமனையில் வைத்தே அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி, கொலை செய்த கணவனின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் கைது!

ABOUT THE AUTHOR

...view details