தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தம்பியை கவனிக்காத மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை! - மாரிமுத்து

கோயம்பத்தூர்: வேடபட்டியில் மனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கொன்றுவிட்டு, கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

kolai

By

Published : Jun 3, 2019, 6:00 PM IST

கோவை, தொண்டாமுத்தூர் ரோடு வேடபட்டி, நஞ்சப்பக்கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து. பூமார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்துவந்தார். இவருக்கு சுப்பாத்தாள் எனும் மனைவியும், கிருஷ்ணன் எனும் மனநிலை பாதிக்கப்பட்ட தம்பி உடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், மனைவி சுப்பாத்தாளிடம், தம்பி கிருஷ்ணனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால், ஊரில் வெற்றிலை வியாபாரம் செய்து வருவதால், கிருஷ்ணனை பார்த்துக் கொள்ள முடியாது என்று சுப்பாத்தாள் மறுத்துள்ளார். இதனால், இவருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

இது தொடர்பாக நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில், மாரிமுத்து வீட்டிலிருந்த சமையல் சிலிண்டரை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த சுப்பாத்தாள் தலையில் போட்டு கொலை செய்தார்.

இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுப்பாத்தாள் உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த குற்ற உணர்ச்சியில், வீட்டிற்கு வெளியே தற்கொலை செய்துகொண்டார்.இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் வெளியே வந்துபோது தூக்கில் தொங்கிய மாரிமுத்துவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வடவள்ளி காவல்துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரும், மனைவியும் ஒரே நேரத்தில் இறந்தது அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details