கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமராஜ் (36). விவசாயியான இவருக்கும், மலையாண்டிபட்டினம் பகுதியைச் சேர்ந்த சரண்யா (22) என்ற பெண்ணுக்கும், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஐந்து வயதில் லோகேஷ் என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்.23) அதிகாலை லட்சுமராஜ் சரண்யாவை அரிவாளால் கையை வெட்டியுள்ளார். இதில் அவர் கூச்சலிடவே சரண்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.