தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியைக் கொன்று காணவில்லை என நாடகம் ஆடிய கணவன் கைது! - பொள்ளாச்சி கொலை கணவன் மனைவி

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே மனைவியைக் கொன்று சாக்கில் கட்டி, கிணற்றில் வீசிவிட்டு, மனைவியைக் காணவில்லை என நாடகம் ஆடிய கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவன்

By

Published : Aug 30, 2019, 8:32 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆர்.பொன்னாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல்(32). கூலி வேலை செய்து வரும் அவருக்குத் திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிய நிலையில் மனைவி கவுசல்யா (25) மற்றும் ஏழு வயது மகளுடன் வசித்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட கவுசல்யா

கடந்த சில நாட்கள் ஆகவே கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று இரவு மனைவியின் மீது சந்தேகம் கொண்ட சக்திவேல் அவரை அடித்து கொலை செய்து, சாக்கில் கட்டி கிணற்றில் வீசியுள்ளார். அக்குற்றத்தை மறைக்கும் விதமாக அவர் பத்து நாட்களுக்குப் பிறகு பொள்ளாச்சி வட்டாட்சியர் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை ஏற்று விசாரணை நடத்திய காவல்துறையினர் கவுசல்யாவைத் தேடி வந்தனர். விசாரணையில் கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மனைவியைக் கொன்று கிணற்றில் வீசிய கணவன்

பின்பு, சக்திவேல் தனது மனைவியின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரைக் கொன்று கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, கவுசல்யாவின் உடலை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details