தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியின் தற்கொலையை தடுக்க முயன்ற கணவன் உயிரிழப்பு - covai district news

கோவை: கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்த மனைவியை தடுக்க முயன்ற கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக கிணற்றில் குதித்து கணவன் தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக கிணற்றில் குதித்து கணவன் தற்கொலை

By

Published : Oct 8, 2020, 12:42 PM IST

Updated : Oct 8, 2020, 12:52 PM IST

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள கோபிராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனபால், மோகனா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று (அக.7) இவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோகனா வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதை தனபால் தடுக்க முயன்றபோது கிணற்றில் இருந்த சகதியில் மாட்டி உயிரிழந்தார். மோகனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தனபால் உடலை தேடிவருகின்றனர். மேலும் அன்னூர் காவல் துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சீட்டுப் பணம் கட்டாததால் தாக்குதல் - மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை!

Last Updated : Oct 8, 2020, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details