தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு: கணவன் தற்கொலை! - பொள்ளாச்சி கணவன் தூக்கிட்டு தற்கொலை

கிணத்துக்கடவு அருகே திருமணத்தை மீறிய உறவு பற்றி மனைவிக்கு தெரிய வந்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவன் தூக்கிட்டு தற்கொலை!
கணவன் தூக்கிட்டு தற்கொலை!

By

Published : May 12, 2021, 9:13 AM IST

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு செம்மொழி கதிர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ்(36). இவரது மனைவி ரம்யா(30). இருவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. முனிராஜ் தாமரைகுளம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் முனிராஜிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முந்தினம் (மே 10) இரவு வீட்டில் இருந்த முனிராஜ் வேறொரு பெண்ணுடன் வாட்ஸ்அப்-ல் சாட்டிங் செய்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனை மனைவி ரம்யா பார்த்து கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று இரவு கணவன் மனைவி இருவரும் தனித்தனி அறையில் உறங்கினர்.

மறுநாள் நேற்று (மே.11) காலையில் முனிராஜ் தனது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி அறையைத் திறந்து பார்த்தபோது அங்கு அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து, காவல்நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் முனிராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மனைவி ரம்யா கொடுத்த புகாரை அடுத்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் தூக்கிட்டு தற்கொலை!

இதையும் படிங்க: கோவிட் பாதிப்பு குறைவதற்கான அறிகுறி தென்படுகிறது!

ABOUT THE AUTHOR

...view details