தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை பாஜகவினரை வைத்து மிரட்டிய நபர்.. கோவையில் நடந்தது என்ன? - போலீசார் வழக்கு பதிவு

கோவையில் தீபக் அரோரா என்பவர் தனது மகனை அடித்த மனைவியை பாஜகவினரை அழைத்து வந்து மிரட்டல் விடுத்ததாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

மனைவியை பாஜகவினரை வைத்து மிரட்டிய நபர்
கணவன் மனைவி பிரச்சனை: மனைவியை மிரட்டிய பாஜகவினர் வீடியோ வைரல்

By

Published : Dec 22, 2022, 11:34 AM IST

Updated : Dec 22, 2022, 11:54 AM IST

மனைவியை பாஜகவினரை வைத்து மிரட்டிய நபர்

கோவை:மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் அரோரா. இவரது மனைவி பிரியா ஆரோரா. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 15 வயதான மகன் பிரியா அரோராவின் காரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதைப் பிரியா அரோகரா கண்டித்ததுடன் மகனை அடிக்கவும் செய்துள்ளார்.

இது தொடர்பாக மகன் தனது தந்தை தீபக் அரோரா மற்றும் சைல்டு லைன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே தீபக் அரோரா, பிரியா அரோரா வீட்டிற்கு பாஜகவில் இருக்கும் நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது பிரியா அரோராவிற்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். இதில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாஜகவைச் சேர்ந்தவர்கள், வீட்டிலிருந்த பிரியா அரோராவையும் மற்றவர்களையும் மிரட்டி விட்டு 15 வயது சிறுவனை அழைத்துச் சென்றனர்.

15 வயது சிறுவன் தன்னை தன் தாயார் அடித்தது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிறுவனின் தாயார் பிரியா அரோரா மற்றும் அவரது வீட்டில் இருக்கும் மாசிலாமணி சூர்யா ஆகிய மூன்று பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் பாஜகவினரை அழைத்துச் சென்று தீபக் அரோரா தனது மனைவியை மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மகன் தற்கொலைக்குக் காரணமான பெண் மீது பெற்றோர் புகார்

Last Updated : Dec 22, 2022, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details