கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மனைவி சாரதாவுடன் வசித்துவந்தார். இவரது மகன்கள் மற்றும் மகள் திருமணமாகி தனியாக சென்றுவிட்டனர். கிருஷ்ணன், சாரதா இருவரும் அப்பகுதியில் கம்பங்கூழ் வியாபாரம் செய்துவந்தனர். இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கணவன் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை -போலீசார் விசாரணை - husband wife death
கோவை: தம்பதியினர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கோபத்துடன் வீட்டைவிட்டு சென்ற சாரதா கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை எனக் கூறி கிருஷ்ணன் தேடிவந்துள்ளார். இதனிடையே, அருகேயுள்ள கிணற்றில் விழுந்து சாரதா தற்கொலை செய்து சடலமாக மிதப்பதாக கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற கிருஷ்ணனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரது உடலையும் கிணற்றில் இருந்து மீட்டு, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்