தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட கணவன்,மனைவி போக்சோவில் கைது! - pollachi

பொள்ளாச்சியில் பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட கணவன்,மனைவி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவன்,மனைவி போக்சோவில் கைது
கணவன்,மனைவி போக்சோவில் கைது

By

Published : Jul 30, 2022, 9:55 AM IST

கோவை:பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவியிடம் அதே பகுதியில் உள்ள ஒரு நபர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபரின் மனைவி பள்ளி மாணவியை துன்புறுத்தியும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பள்ளி மாணவி தனது பெற்றவரிடம் தெரிவித்துள்ளார்; பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை அடிப்படையில் கணவன் மனைவி இருவரையும் போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இறுதி ஊர்வல நிகழ்வில் மது கேட்டு வாக்குவாதம் - நண்பனை கத்தியால் குத்திய இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details