கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, டாப்ஸ்லிப் ஆகிய நான்கு வனசரகங்கள் உள்ளன. இந்திய வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்டறியவும், ஆய்வு மேற்கொள்ளவும் 500க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் ஒப்பந்தப் பணியாளராக இங்கு பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு வனத்துறை சார்பில் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களாக வேட்டை தடுப்பு காவலர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் லீமா ஜோஷி புலிகள் காப்பகம் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்திலுள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.