தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுக்கரை சாலையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு! - கோவை செய்திகள்

இறந்து சில மாதங்கள் ஆன நிலையில் கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு குறித்து, மதுக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விசாரணையை தொடங்கியுள்ளனர்
மதுக்கரை காவல்துறை

By

Published : Oct 31, 2021, 7:56 AM IST

கோவை: மதுக்கரை காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட மரப்பாலம் சோதனைச்சாவடி அருகே உல்ல தர்ம லிங்கேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதை செல்லும் வழியில் மனித எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது.

இதைக் கண்ட மக்கள், மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கைரேகை தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்தவரின் எலும்புக்கூடு போல் இது இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காவல் துறையினர் பதிவாகியுள்ள காணாமல் போன நபர்கள் குறித்த புகார்களைக் கொண்டும் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த 5 கி.மீ தொலைவுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details