அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் மழை காரணமாக நான்கு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் வீடுகளில் இருந்தவர்கள் அப்படியே மண்ணில் புதைந்தனர். காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கட்டட விபத்து - பலி எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு! - வீடு இடிந்து விழுந்து 16பேர் உயிரிழப்பு
கோவை: மேட்டுப்பாளையம் அருகே மழையால் வீடுகள் இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள்உள்பட 17பேர் உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கட்டட இடிபாடுகளில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். மழையால் வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TAGGED:
17 killed in house collapsed