கோயம்பத்தூர்: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆழியாறு அடுத்து சின்னார் பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில், இன்று (மே.16) காலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் இப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது.
இதனால், எட்டு வீடுகள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி, நேரில் சென்று பார்வையிட்டு மலைவாழ் மக்களுக்கு ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கினார்.