தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 19, 2020, 12:14 PM IST

ETV Bharat / state

விநாயகர் சிலை அகற்றம்: இந்து அமைப்பினர் எதிர்ப்பு!

கோவை: சூலூர் அருகே விநாயகர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சிலை அகற்றம்
விநாயகர் சிலை அகற்றம்

கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை உள்ளது. அந்தச் சிலை அங்கு இருப்பதற்கு சில அலுவலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி நேற்று (ஆக.18) இரவு விநாயகர் சிலையை அங்கிருந்து எடுத்துவிடக் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் அலுவலகப் பணியாளர்கள் சிலையை அப்புறப்படுத்த தொடங்கினர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால் இந்து அமைப்பினர் அப்பகுதியில் அதிகளவில் கூடினர்.

இதனையடுத்து அங்கு, சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி, கருமத்தம்பட்டி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, சூலூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அப்பொழுது இந்து அமைப்பினர் அந்த விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதனிடையே சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி, விநாயகர் சிலை அகற்றப்படாது என உறுதியளித்ததையடுத்து இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: தஞ்சாவூர், 5 அடி ராஜ விநாயகர் சிலை பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details