கோவை மாவட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், எதிராகவும் போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் காந்திபுரம் பகுதியில் இந்து அமைப்பினர் தொடர் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இப்போராட்டத்தில் இந்து முன்னணியினர், பாஜகவினர் தொடர்ந்து மாலை நேர தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, காந்திபுரம் பகுதியில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து வந்த நிலையில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பினரை கண்டித்து மனு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசுகையி, ’குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சட்டத்திற்கு ஆதரவாக காந்திபுரத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.
இந்து அமைப்பினர் போராட்டங்களுக்கு கண்டம் தெரிவித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மனு மேலும், பொதுமக்கள் பிரச்சினைகளுக்குகூட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்குவதில்லை எனவும், பதற்றத்தை உருவாக்கும் வகையில் கோவையில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் எனவும், உடனடியாக அவர்களுக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தாங்களும் போட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:ஈரோட்டில் விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை!