கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவில் தெற்கு மாவட்டம் சார்பில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இன்று(செப் 17) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெகமம், பொள்ளாச்சி, வால்பாறை என அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
நடிகர் சூர்யாவிற்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு; இந்து முன்னணி - நடிகை ஜோதிகா
கோயம்புத்தூர்: நடிகர் சூர்யாவிற்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் சினிமாவை வைத்துதான் பல்வேறு தலைவர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். சூர்யா ஒரு சிறந்த நடிகர் அவரது குடும்பம் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் தற்போது சூர்யா திசைமாறி நக்சல்களுடன் தொடர்பு ஏற்படுத்தியுளார். அதற்கு அவர் மனைவியும் ( ஜோதிகா ) ஒரு காரணம். அவர்கள் பின்னணியில் தீவிரவாத குழு ஒன்று செயல்படுகிறது. அகரம் பவுன்டேஷன் டிரஸ்டில் நக்சல்கள் ஆதிக்கம் உள்ளதால் அவர்கள் சூர்யாவை தவறாக வழிநடத்துகின்றனர்.
அவரது தந்தை சூர்யாவை கண்காணித்து, ஆய்வு செய்து நல்வழிபடுத்த வேண்டும், நீட் தேர்வு எல்லா மாநிலத்திலும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சூர்யாவை முன்னிலைப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இதோடு சூர்யா திருந்த வேண்டும் இல்லை என்றால் இந்து முன்னனி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்” என்றார்.