தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் - கோவையில் பதற்றம்! - கோவையில் பதற்றம்

கோவை: இந்து முன்னணி பிரமுகர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல், பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் - கோவையில் பதற்றம்!
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் - கோவையில் பதற்றம்!

By

Published : Mar 4, 2020, 11:47 PM IST

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜக, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடந்த 3 நாட்களாக தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் இன்று கலந்துகொண்ட போத்தனூரைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மதுக்கரை ஆனந்த் (32), சிறப்புரையாற்றிவிட்டு இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு நஞ்சுண்டாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பாலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆனந்தின் தலைப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் - கோவையில் பதற்றம்!

இதுகுறித்து தகவலறிந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து மாநகர காவல்துறையினர் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே படுகாயமடைந்த ஆனந்தை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details