தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலப்பிரச்னை: பெண் மீது இந்து முன்னணி பிரமுகர் தாக்குதல் - coimbatore district news

கோயம்புத்தூர்: நிலத்தில் வழித்தடம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை அடிக்கும் இந்து முன்னணி பிரமுகரின் காணொலி காட்சி வெளியாகியுள்ளது.

பெண்ணை தாக்கிய இந்து முன்னணி பிரமுகர்
பெண்ணை தாக்கிய இந்து முன்னணி பிரமுகர்

By

Published : Dec 1, 2020, 4:53 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திலகம். இப்பெண்ணிற்கு செம்மாண்டம்பாளையம் பகுதியில் தோட்டம் உள்ளது. இதன் அருகே திருப்பூரை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் என்பவர் இடம் வாங்கியுள்ளார்.

திலகம் அவரது நிலத்தில வழித்தடம் அமைத்துள்ளார். அதனை எடுக்கக் கோரி முருகேசன் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.

பெண்ணை தாக்கிய இந்து முன்னணி பிரமுகர்

இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. பின்னர் வழித்தடத்தை முருகேசன் எடுக்க முயன்றபோது , அதை திலகம் தடுத்துள்ளார். அப்போது முருகேசன் திலகத்தை தாக்கினார்.

இதனையடுத்து அப்பெண் இந்து முன்னணி பிரமுகர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முருகேசன் மீது மிரட்டல், தகாத வார்த்தைகளில் பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்தப் பெண்ணை இந்து முன்னணி பிரமுகர்அடிக்கும் காணொலி காட்சி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்: போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details