தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்தில் பெண் பலி: கோவையில் சோகம் - கோவையில் நெடுஞ்சாலயில் லாரி விபத்து

கோயம்புத்தூர்: கருமத்தபட்டி தேசிய நெடுஞ்சாலையில் பழுதான மேம்பாலத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் பரிதாபமாக  உயிரிழந்தார்.

women dead

By

Published : Aug 28, 2019, 8:18 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தை அடுத்த கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மோகனப்பிரியா. இவர்கள் இருவரும் அன்னூர் சாலையில் ஹாலோபிளாக் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவருகிறார்கள். இந்நிலையில், மோகனப்பிரியா இன்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு கருமத்தம்பட்டி சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி திடீரென இடது பக்கம் திரும்பியபோது லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த மோகனப்பிரியாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த அவர் லாரியின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பழுதான மேம்பாலம்

இதனையடுத்து, விபத்து குறித்து அறிந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பழுதான மேம்பாலத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கட்டுமான பொருட்களை அங்கேயே வைத்து சென்றுள்ளனர்.

இதனால் குறுகிய சாலையில் சென்ற லாரியின் ஓட்டுனர் அதை பார்த்து திடீரென திரும்பியதால் பின்னால் வந்த பெண் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். மற்ற பாலங்களைக் காட்டிலும் மிக குறுகலான பாலமாக கருமத்தம்பட்டி பாலம் உள்ளதால் அழுத்தம் தாங்காமல் தற்போது பாலம் விரிவடைய தொடங்கிய நிலையில் அதனை சரிசெய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கருமத்தபட்டி தேசிய நெடுஞ்சாலை

இரவு நேரத்தில் மட்டும் இந்த பணியை அவர்கள் மேற்கொண்டு பகலில் அப்படியே அந்த பகுதியில் கட்டுமான பொருட்களை விட்டுச் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

உடனடியாக மேம்பாலத்தை இடித்து புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் குறுகலாக உள்ள சர்வீஸ் சாலையை அகலப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details