கோவை:கர்நாடக மாநிலம் மங்களூரு, கரோடி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து திடீரென மர்ம பொருள் வெடித்து கடும் புகை வெளியேறியது. ஓட்டுநர், பயணி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மர்ம பொருள் வெடித்தது விபத்து போல் இல்லை என்றும் தீவிரவாத தாக்குதலுக்கான முகாந்திரம் இருப்பதாக கர்நாடக டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கர்நாடகா- தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கத்தை விட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.