கோயம்புத்தூர்: வடகிழக்கு பருவமழையால் கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான நீலாம்பூர், தென்னம்பாளையம், கருமத்தம்பட்டி, கணியூர் ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.