தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை: வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி - covai latest news

கோவை: மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை காரணமாக சாலையில் பெருகெடுத்து ஒடிய மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிகுள்ளாகினர்.

கொட்டித்தீர்க்கும் மழை

By

Published : Oct 18, 2019, 10:31 AM IST

தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கோவை மாநகர் பகுதிகளான உக்கடம், டவுன்ஹால், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வடகோவை, காந்திபுரம், பீளமேடு, விமானநிலையம் போன்ற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் தேங்கிய நீரை அப்புறப்படுத்த மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொட்டித்தீர்க்கும் மழை

இதையும் படிங்க:மிரட்டும் மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிகார்!

ABOUT THE AUTHOR

...view details