கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன. குறிப்பாக கனமழைக் காரணமாக ஆழியார் அணை வேகமாக நிரம்பியும் வருகிறது.
கோவை மாவட்டத்தில் கனமழையால் தவிக்கும் கிராம மக்கள் - பொள்ளாச்சி கனமழை
கோவை: தொடர் கனமழை காரணமாக அம்பராம்பாளையம், நவமலை ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
![கோவை மாவட்டத்தில் கனமழையால் தவிக்கும் கிராம மக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4092765-thumbnail-3x2-rain.jpg)
அம்பராம்பாளையம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அங்குள்ள கிராமங்களை இணைக்கும் பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அங்குள்ள கிராமமக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிரமடைந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புக மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா அடித்து அறிவுறுத்தப்பட்டது.
இதைபோல் குரங்கு நீர்வீழ்ச்சியிலும் வெள்ளம் ஏற்பட்டதால் பாதுகாப்பு கம்பிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும் நவமலையில் உள்ள பாலம் வெள்ளத்தால் மூழ்கியதால் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மலைவாழ் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.