கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவையின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக, நொய்யல் ஆற்றில் மழை நீர் அதிக அளவில் ஓடுகின்றது. இதனால் நொய்யல் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை ஆனைக்கட்டி அடுத்த தாவாளம் கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 6) பெய்த பலத்த மழையால் பவானி ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலத்தின் மேல்பகுதி வரை, மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.