கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான வால்பாறை, டாப் சிலிப் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சோலையார் அணை, சக்தி எஸ்டேட், தல நார் பகுதிகளிலிருந்து வரும் மழை நீரால், குரங்கு நீர் வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆழியாற்றில் பெய்து வரும் கனமழை - குரங்கு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, குரங்கு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆழியாற்றில் பெய்து வரும் கனமழை - குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு
வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் முகாமிட்டு நீர் வரத்தைக் கண்காணித்து வருகின்றனர். குரங்கு நீர் வீழ்ச்சி மற்றும் சிற்றோடைகளில் பாய்ந்தோடும் வெள்ளம் காரணமாக, ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், இன்னும் இரண்டு நாட்களில் அணை நிரம்பக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.