கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. குறிப்பாக கோவை மாநகர், சுற்று வட்டார பகுதிகளான ஆனைக்கட்டி, துடியலூர், சுந்தராபுரம், கிணத்துக்கடவு, அன்னூர், சரவணம்பட்டி, தொண்டாமுத்தூர், போன்ற பகுதிகளில் இரவு முதல் கனமழை பெய்தது.
கோவையில் வெளுத்து வாங்கிய கோடை மழை..! - coimbatore rain news
கோவை: பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
sds
இதன் விளைவாக கண்மாய்கள், குளம், குட்டைகள் அனைத்திலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது சிரமத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!