கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (அக்.20) காலை 11 மணி அளவில் கோவை மாநகர் பகுதிகளான ரயில் நிலையம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்பதனம் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவையில் கனமழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்! - Coimbatore District News
கோவையில் காலையிலிருந்து மாலை வரை ஆங்காங்கே பெய்த கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
![கோவையில் கனமழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்! கோவையில் பலத்த மழை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9248839-thumbnail-3x2-cbe.jpg)
கோவையில் பலத்த மழை
கோவையில் பலத்த மழை பெய்யும் காட்சி