தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாப் சிலிப்பில் தொடர் மழை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்! - கோவை

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் தொடர் மழை பெய்துவருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

pollachi

By

Published : Sep 8, 2019, 4:50 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் பகுதி, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து யானை சவாரி, டிரக்கிங், யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளிட்டவற்றை கண்டு மகிழ்வார்கள்.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் டாப்சிலிப் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விடாமல் மழை பெய்து வருகிறது.

பொள்ளாச்சி டாப் சிலிப்

விடுமுறை நாளான இன்று டாப்சிலிப் பகுதிகளை சுற்றிப் பார்ப்பதற்காக வந்திருந்த சுற்றுலா பயணிகள், மழையினால் அவரவர் விடுதிக்குள் முடங்கிக் கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு ஏமாற்றமடைந்துள்ளனர்.

மேலும், மழையினால் வனப்பகுதிக்குள் மின்சார கம்பிகள் மீது, மூங்கில்கள் விழுந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளும், வனத்துறையினரும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details