கேரளா மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். இது கேரளா, தமிழ்நாடு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், கேரளா பகுதியில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் நிபா வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டது.
"நிபா" வைரஸ்: எல்லைப் பகுதியில் சுகாதாரத்துறை முகாம்! - precautionary actions
கோவை: கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் சுகாதாரத்துறை முகாமிட்டு வாகனங்களில் வருபவர்களை மருத்துவ பரிசோதனை செய்து அனுமதிக்கின்றனர்.
இதனால், தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் கேரளா - தமிழ்நாடு எல்லைப் பகுதியில் முகாமிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்த பின்னே அனுமதிக்கின்றனர்.
காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று ரத்தப் பரிசோதனை செய்யப்படுகின்றது. இதைத் தொடர்ந்து மாநில எல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.