தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பீளமேடு பகுதியில் கொள்ளை முயற்சி - காவல்துறை விசாரணை - அரை நிர்வாண கொள்ளையர்கள்

கோயம்புத்தூர்: நகர்ப் பகுதிகளில் தொடர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை முயற்சி
கொள்ளை முயற்சி

By

Published : Jul 26, 2020, 10:12 AM IST

கோயம்புத்தூர் பீளமேடு பாலகுரு கார்டன் குடியிருப்பு பகுதியில் நேற்று (ஜூலை 25) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் முகமூடி அணிந்து சுற்றித் திரியும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன. இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மருத்துவர் வீடு உள்பட மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, நகரின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போல், ஜூலை 23ஆம் தேதி இருகூர் தீபம் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மேல் சட்டை இல்லாமல் அரை நிர்வாண நிலையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details