தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின், உதயநிதியை சாதிய ரீதியாக சீண்டிய ஹெச். ராஜா! - h raja recent news

கோயம்புத்தூர்: பெண்களைப் பற்றி இழிவாக பேசுவது ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் குலவழக்கம் என சாதிய ரீதியாக விமர்சித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஹெச் ராஜா
ஹெச் ராஜா

By

Published : Jan 12, 2021, 2:36 PM IST

பொள்ளாச்சியில் பாஜக சார்பில் சமூக வலைதள தேசிய சங்கம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஊழல் கட்சி என்று ஈவெரா கூறியுள்ளார்.

சென்னையில் ஏழை எளிய தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை சுரண்டி கொள்ளை அடித்தவர்கள்தான் திமுகவினர். இன்னும் சொல்லப்போனால் பூச்சி மருந்து, வீராணம் ஊழலுக்கு பிறகு மிகப்பெரிய பரிமாணம்தான் 2ஜி ஊழல். ஒரு லட்சத்து 66 கோடி கொள்ளையடித்து விட்டு நாடகம் ஆடி வருகிறார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். மார்ச் 15ஆம் தேதிக்குள் இவர்களின் வழக்கு விசாரணை முடிந்து விடும். அப்போது அவர்கள் சிறைச்சாலைக்கு செல்வது உறுதி. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் நீலகிரி மற்றும் தூத்துக்குடி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும்.

ஹெச். ராஜா

பெண்களை பற்றி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவதூறாக பேசுவது அவர்களின் குலவழக்கம். திமுகவும் திருமாவளவனும் இந்துக்களை பற்றி கேவலமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சாதிய ரீதியாக ராஜா விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆபாசமாகப் பேசிய பெண்: யூ-ட்யூபில் அப்லோடு செய்த மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details