தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரி ஏய்ப்பு: தென்னை நார் தொழிற்சாலைகளில் ஜிஎஸ்டி குழு ஆய்வு!

கோவை: பொள்ளாச்சி, நெகமம் அருகேயுள்ள தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களில் டெல்லியிலிருந்து வந்திருந்த குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

gst-tax-evasion-gst-team-study-on-coconut-fiber-industries
gst-tax-evasion-gst-team-study-on-coconut-fiber-industries

By

Published : Mar 4, 2020, 11:40 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவுப் பகுதிகளில் சுமார் 1,300க்கும் மேற்பட்ட தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில், சில நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் செயல்படுவதாக, நெகமம் - கள்ளிப்பட்டி புதூரைச்சேர்ந்த குமார் ராஜ் என்பவர் டெல்லியிலுள்ள ஜிஎஸ்டி ஆணையருக்கு கடந்த ஜனவரி 11ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

அவர் அளித்திருந்த புகாரில் கள்ளிப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட 20க்கும் தென்னை நார் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்த நிறுவனங்கள் ஜிஎஸ்டி, பஞ்சாயத்து வரி உள்ளிட்ட எதையும் செலுத்தாமல் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை உற்பத்தி செய்வதாகவும், ஜிஎஸ்டி தலைமை அதிகாரிக்கு புகாரளித்திருந்தார்.

இதனையடுத்து டெல்லியிலிருந்து விநாயக் நாயக் தலைமையிலான 12 அதிகாரிகள் கள்ளிப்பட்டி புதூரிலுள்ள நிறுவனங்களில் ஜிஎஸ்டி வரி சம்பந்தமான விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஒரு சில நிறுவனங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியும், அதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தென்னை நார் தொழிற்சாலைகளில் ஜிஎஸ்டி குழு ஆய்வு

தென்னை நார் உற்பத்திக்கு 5 விழுக்காடு மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டாலும், அந்நிறுவனங்கள் இதுவரை வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளதாகவும், மேலும் பல நிறுவனங்களில் இந்த விசாரணையானது விரைவில் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க:ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை..!

ABOUT THE AUTHOR

...view details