தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ரசீது மூலம் ஜி.எஸ்.டி மோசடி செய்தவர் கைது! - GST fraudster arrested in Coimbatore

கோயம்புத்தூர்: போலி ரசீது மூலம் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட இரும்பு நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ரசீது மூலம் ஜி.எஸ்.டி மோசடி செய்தவர் கைது  கோவையில் ஜி.எஸ்.டி மோசடி செய்தவர் கைது  ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு மோசடி  GST tax evasion fraud  GST fraudster arrested with fake receipt  GST fraudster arrested in Coimbatore  GST fraud
GST fraudster arrested in Coimbatore

By

Published : Jan 30, 2021, 12:25 PM IST

கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(36). இவர் அதே பகுதியில் 'சன்ரைஸ் என்டர்பிரைசஸ்' என்ற இரும்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடி நடப்பதாக ஜிஎஸ்டி அலுவலர்களுக்கு புகார் வந்தது.

அதனடிப்படையில், ஜிஎஸ்டி இணை ஆணையர் விஜயகிருஷ்ணவேலன் தலைமையிலான அலுவலர்கள் அந்நிறுவனத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இரும்பு பொருள்களை விற்பனை செய்தது போன்று போலி ரசீதுகள் தயாரித்து இரண்டு கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கார்த்திகேயனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்ததி வருகின்றனர்.

ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்ட கார்த்திகேயன்

இதையும் படிங்க:ஆன்லைன் கடன் மோசடி: விசாரணையைத் தீவிரப்படுத்துமா சைபர் க்ரைம்?

ABOUT THE AUTHOR

...view details