தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறால் பெண் மீது ஆசிட் வீசிய மூதாட்டி! - குடும்ப தகராறு

கோவை: சூலூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக உறவுக்கார பெண் மீது, ஆசிட் வீசிய மூதாட்டியின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

grandmother-throws-acid-on-woman-due-to-family-dispute
grandmother-throws-acid-on-woman-due-to-family-dispute

By

Published : Mar 14, 2020, 9:37 PM IST

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள காங்கேயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (61). இவரது மனைவி சகுந்தலா (55). இருவரும் வீட்டிலேயே மெழுகுவர்த்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவரது வீட்டின் அருகிலேயே சகுந்தலாவின் மாமன் மனைவி ராமாத்தாள் (80), சொந்தமாக தங்க நகைகள் அடமானத் தொழில் நடத்திவருகிறார்.

இந்நிலையில் சகுந்தலாவிற்கும், ராமாத்தாளுக்கும் ஏற்கெனவே குடும்பத் தகராறு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சகுந்தலா, தனது உறவினர் சக்திவேல் என்பவருடன் நடந்து வந்துள்ளார். அப்போது அவர்களைக் கண்ட ராமாத்தாள், பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அப்பெண் மீது வீசியுள்ளார்.

ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த பெண்

இதில் படுகாயமடைந்த அப்பெண்ணை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளானர். மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல் துறையினர் மூதாட்டியைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் மீது ஆசிட் வீசிய மூதாட்டி

இதையும் படிங்க:குளிர்பானத்தில் மயக்க மருந்து - சிறுமியை வன்புணர்வு செய்த வழக்கில் இரண்டாவது நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details