கோவையில் முதன்முறையாக லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் ஐமேக்ஸ் திரையரங்கம் அவினாசி சாலை விமான நிலையம் அருகே பிராட்வே சினிமாஸ் நவீன தொழில்நுட்பத்துடன், கூடிய ஒன்பது திரைகளைக் கொண்ட நவீன மல்டிப்ளெக்ஸ் திரையரங்கை, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
இந்த புதிய ஐமேக்ஸ் திரை, அற்புதமான லேசர் புரஜக்ஷன், 12 சேனல் கொண்ட ஒலி அமைப்பு, துல்லியமான கிரிஸ்டல் க்ளியர் படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட துல்லியமான ஒலியுடன் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பிராட்வே மெகாப்ளெக்ஸ் குறித்து அதன் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார் மற்றும் இயக்குநர் பாலமுருகன் ஆகியோர் கூறுகையில், ’’பிராட்வே மெகாப்ளெக்ஸ் நாட்டில் வெள்ளித்திரை அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கத்துடன், பொழுது போக்கிற்கான சிறந்த இடத்தை வழங்கும் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டது.
ஐமேக்ஸ் லேசர், EPIQ பிரீமியம் பெரிய வடிவம் மற்றும் கோல்ட் ஸ்கிரீன் திரைகள் மூலம் ப்ராட்வே சினிமாஸ் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும். மேலும் EPIQ பிரீமியம் எனும் பெரிய வடிவம், அதன் அதிவேக தொழில்நுட்பத்துடன், திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.