தமிழ்நாடு

tamil nadu

குடிநீர் குழாய் குழியில் சிக்கிய அரசு பேருந்து.. கோவையில் தொடரும் அவலம்!

By

Published : Dec 6, 2022, 1:17 PM IST

கோவையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கியது.

குடிநீர் குழாய் குழியில் சிக்கிய அரசு பேருந்து.. கோவையில் தொடரும் அவலம்!
குடிநீர் குழாய் குழியில் சிக்கிய அரசு பேருந்து.. கோவையில் தொடரும் அவலம்!

கோயம்புத்தூர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனைகட்டி சாலையில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. பின்னர் அந்த குழிகள் மூடப்பட்டது. இருப்பினும் சரிவர குழிகள் மூடப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று (டிச.6) அந்த சாலையில் மருதமலை சென்ற அரசு பேருந்து குழியில் சிக்கியுள்ளது.

அப்போது பேருந்தின் சக்கரங்கள் சிக்கிக் கொண்ட நிலையில், பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் குழியில் சிக்கிய பேருந்தை மீட்க போக்குவரத்துத்துறை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதேபோல் அந்த வழியாக வந்த வேன் உள்பட சில வாகனங்களும் அடுத்தடுத்து குழியில் சிக்கியது.

இந்த சாலையில் குடிநீர் குழாய் அமைக்க குழிகள் தோண்டப்பட்டு சரி வர மூடப்படாததால், அடிக்கடி வாகனங்கள் குழிகளில் சிக்கிக்கொள்வது தொடர் கதையாக இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம் சாலைப் பணிகள் முடிந்த பின்னர், தரமான முறையில் குழிகளை மூடி சாலைகள் சீரமக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கியது.

மேலும் இடையார்பாளையம், வேலாண்டிபாளையம் ஆகிய பகுதிகளிலும் சாலை ஓரத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளால் பேருந்துகள் அடிக்கடி குழிக்குள் சிக்குவது தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க:அரளவைக்கும் அதிநவீன கண்காணிப்பு வண்டி; சிறப்பம்சங்களைக் கண்டு அதிர்ந்த டிஜிபி

ABOUT THE AUTHOR

...view details