தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏழு பேர் விடுதலை... ஆளுநர் அலுவலகம் கண்ணாமூச்சி விளையாடுகின்றன - பாலகிருஷ்ணன் - Rajiv gandhi murder

கோவை: ஏழு பேர் விடுதலையில் மத்திய - மாநில அரசுகளும், கவர்னர் அலுவலகமும் கண்ணாமூச்சி விளையாடுகின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

k balakrishnan, cpim
k balakrishnan, cpim

By

Published : Feb 7, 2020, 6:15 PM IST

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று 28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு பேர் விடுதலையில் மத்திய - மாநில அரசுகளும் கவர்னர் அலுவலகமும் கண்ணாமூச்சி விளையாடுகின்றன.

முன்னதாக இந்த பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, மாநில ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கலாம் என தெளிவான தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து மாநில அரசும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் மாநில அரசின் தீர்மானத்தை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இந்த விஷயத்தில் இனியும் காலம் கடத்துவது சரியாக இருக்காது. ஆளுநர் முடியாது என்று கூறினால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லலாம் .

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே. பாலகிருஷ்ணன்

உண்மையில் யாருக்கும் 7 பேர் விடுதலையில் அக்கறை இல்லை. ராஜீவ் காந்தி குடும்பத்தினர் பொதுமன்னிப்பு கொடுத்த பின்பும் அவர்களின் கருணை மனுவை கிடப்பில் போட்டிருப்பது நியாயமில்லை. எனவே இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: சாதி மறுப்புத் திருமணம்: மாவட்ட காவல் அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்

ABOUT THE AUTHOR

...view details