தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என். ரவி ஈஷா யோகாவில் தரிசனம் - Coimbatore News

அண்மையில் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்ட ஆர்.என். ரவி ஈஷா யோகாவில் தனது குடும்பத்துடன் தரிசனம்செய்தார்.

தனது குடும்பத்தாருடன் தரிசனம்
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர் .என். ரவி

By

Published : Oct 20, 2021, 7:38 AM IST

கோவை: ஈஷா யோகா மையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம்செய்தார்.

இரண்டு நாள் பயணம்

இரண்டு நாள் பயணமாக ஆர்.என். ரவி கடந்த வெள்ளிக்கிழமை கோவை வழியாக, நீலகிரி மாவட்டம் உதகை சென்றார். அங்கு குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் இன்று கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம்செய்தார்.

பின்னர் ஈசா நிறுவனர் சத்குருவை நேரில் சந்தித்து உரையாடிய அவர் விமானம் மூலம், மீண்டும் சென்னை திரும்பினார். முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவி தனது குடும்பத்துடன் ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி ஆகிய கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம்செய்தார்.

ஆளுநர் வருகையை முன்னிட்டு அவர் பயணித்த சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமருடன் ஆலோசித்த அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details