கோயம்புத்தூர்:காதலர் நாளில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஜோசப், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சௌமியா ஆகியோர் கோவையில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் பெற்றோர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்குத் கு. ராமகிருஷ்ணன் திருமணம் செய்துவைத்தார்.
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய கு. ராமகிருஷ்ணன், "காதல் என்பது இயற்கையான உணர்வு. இந்தியாவில் மட்டும் இதில் சாதி, மதம் பார்க்கப்படுகிறது. கரோனா காலத்தில் 400 திருமணங்கள், ஆறாயிரம் சுயமரியாதை திருமணங்கள் நடத்திவைத்துள்ளோம்.