தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடுரோட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல் - Government school students split into two groups and clashed on road in Ondipudur

கோவை ஒண்டிபுதூரில் அரசு பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சாலையில் மோதிக் கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Government school students split into two groups and clashed on road in Ondipudur நடுரோட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்
Government school students split into two groups and clashed on road in Ondipudur நடுரோட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்

By

Published : Apr 28, 2022, 7:32 AM IST

கோயம்புத்தூர்ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்டனர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பேருந்து நிறுத்ததில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் நின்று கொண்டு இருந்த போது, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஒதுங்கி நின்றனர். மாணவிகள் மற்றும் பொது மக்கள் முன்பாக அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனிடையே, மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்ட காட்சி சாலையில் காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மோதல் நடந்த அன்றே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மாணவர்களை எச்சரித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மாணவர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! - 10 மாணவிகள் சஸ்பெண்ட்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details