தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசு அறிவிப்பின்படி திறக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் - கரோனா வைரஸ்

கோவை: மாவட்ட பதிவாளர் அலுவலகம் வழக்கம்போல் திறக்கப்பட்டது. மக்கள் அனைவரும் கூட்டமாக இல்லாமல் இடைவெளி விட்டு அமர வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

அரசு அலுவலகங்கள்
அரசு அலுவலகங்கள்

By

Published : Apr 20, 2020, 1:21 PM IST

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசானது ஒரு சில அரசு அலுவலகங்கள் மட்டும் திறக்க அறிவுறுத்தியது. அதன்படி பதிவாளர் அலுவலகம், சுங்கச்சாவடி போன்றவற்றைத் திறக்க அறிவுறுத்தியது. அதன்படி இன்று கோவை மாவட்ட பதிவாளர் அலுவலகம் வழக்கம்போல் திறக்கப்பட்டது.

அரசு அலுவலகங்கள்

இந்நிலையில் ஊரடங்கு இருக்கும் நிலையிலும் அங்கு பொதுமக்கள் வருகை காணப்பட்டது. மக்கள் அனைவரும் கூட்டமாக இல்லாமல் இடைவெளிவிட்டு அமர வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அங்கு வந்த மக்களும் முகக்கவசம் அணிந்தே வந்தனர்.

மேலும் பதிவாளர் அலுவலகம் வழக்கம்போல 10 மணிக்கு திறக்கப்பட்டும் ஊழியர் குறைந்தளவே வந்திருந்தனர். உயர் அலுவலர்கள் 10.30 மணி ஆகியும் வராததால் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை நேரிட்டது.

மத்திய அரசு அறிவிப்பின்படி திறக்கப்பட்ட அரசு அலுவலகங்கள்

தற்போது உள்ள நிலையில் காவல் துறையினர் பல இடங்களில் மக்களை அனுமதிக்காத நிலையில் மக்கள் வந்துசெல்ல சிரமப்படுகின்றனர். மேலும் அரசு ஊழியர் காலம் தாழ்த்துவதால் மக்கள் அவர்களது வேலையை முடித்து வீடு திரும்ப நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொல்கத்தாவில் மூன்று மருத்துவர்களுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details