கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படிக்கும் திருப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக அம்மாணவி தங்கியிருந்த விடுதியின் முதல் தளம் மூடப்பட்டது.
இந்தத் தளத்தில் தங்கிருந்த மாணவர்கள் அருகிலுள்ள அறைக்கு அனுப்பப்பட்டனர். அம்மாணவியுடன் தங்கிருந்த 40 செவிலியர் மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் கடந்த 5ஆம் தேதி திருப்பூரிலிருந்து கோவை வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று கோவை அரசு மருத்துவமனையில் இயன்முறைப் பிரிவில் (பிசியோதெரபி வார்டு) பணிபுரியும் ஊழியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் படிப்பு படிக்கும் மாணவிக்கு கரோனா உறுதியானது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரிப்பதன் காரணமாக, கோவை மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்குச் சென்றுவந்தால் சில நாள்கள் சுய தனிமையிலிருக்கவும், கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: ’கரோனா வார்டில் அடிப்படை வசதிகள் இல்லை’ - நோயாளிகள் குற்றச்சாட்டு