தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனை முன்பு அறுவை சிகிச்சை தொடர்பான மத்திய அரசின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 8, 2020, 4:39 PM IST

அலோபதி மருத்துவர்கள் செய்துவரும் அறுவை சிகிச்சைகளை ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதேபோன்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக இந்திய மருத்துவச் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 11ஆம் தேதி 24 மணி நேர மருத்துவப் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: இரவு முழுவதும் போராட்டம், சாலையில் உறங்கிய காங்கிரஸ் எம்பிக்கள்!

ABOUT THE AUTHOR

...view details