தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு - 9 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - இந்து முன்னனி பிரமுகர் கொலை வழக்கு

கோயம்புத்தூர் : இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் மேலும் மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை வழக்கு
கொலை வழக்கு

By

Published : Oct 20, 2020, 6:32 AM IST

கோயம்புத்தூர் காந்திபுரம் ராம்நகர் பகுதியில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதியன்று இந்து முன்னணி பிரமுகர் பிஜு (37) பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அக்டோபர் 8ஆம் தேதியன்று ஆறு பேர் (கார்த்திக், ராஜா, அருண், அரவிந்த், பிரபு, பிரவின்) மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று (அக்.19) பிரகாஷ், சத்யபாண்டி (எ) சக்தி, ஆறுமுகம் ஆகிய மேலும் மூவரின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த கொலை வழக்கில் இதுவரை மொத்தம் ஒன்பது பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவு சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவகங்கை மூத்த வாக்காளர் பழனியப்ப செட்டியார் மரணம்: ப. சிதம்பரம் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details