தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பஞ்சு மில்லில் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்பலான பொருட்கள் நாசம் - வடமாநில தொழிலாளர்கள்

பொள்ளாச்சி அருகே பருத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பஞ்சு மில்லில் பற்றி எரிந்த தீ: 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசம்
பஞ்சு மில்லில் பற்றி எரிந்த தீ: 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசம்

By

Published : Jan 11, 2023, 7:29 AM IST

Updated : Jan 11, 2023, 12:12 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்துள்ள கெடுமேடு மலையாண்டிபட்டினம் அருகே தன்ராஜ் என்பவருக்கு சொந்தமான வெங்கடேஸ்வரா பஞ்சு மில் செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு விஷ்ணு என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் மில் தரப்பட்டது.

இந்த மில்லில் வெளியில் இருந்து வாங்கப்படும் பஞ்சிலிருந்து நூல்கள் தயாரிக்கப்படுகிறது. அதற்காக பஞ்சு பண்டல்கள் வைக்கப்படிருப்பது வழக்கம். இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் மில்லின் ஒரு பகுதியிலேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு (ஜனவரி 10) திடீரென மில்லின் ஒரு பகுதியில் தீ பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி பஞ்சு பண்டல்கள் வைக்கப்பட்டிருந்த குடோனிலும் பரவியது.

இதனிடையே தீ விபத்து குறித்து பொள்ளாச்சி மற்றும் உடுமலை தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தீயணைப்புத்துறை அலுலர்கள் சம்பவயிடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: கஞ்சா வேட்டை 22 பேர் கைது; ஆக்‌ஷனில் இறங்கிய தாம்பரம் போலீஸார்

Last Updated : Jan 11, 2023, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details