கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் ஏர் அரேபியா விமானம் வந்தது. விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த பயணிகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச்சேர்ந்த ஜியாவுல் ஹக்(23), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீர் சோகைல்(23) என்பது தெரியவந்தது. பின்பு அதிகாரிகள் அவர்களது பை உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்தனர்.