தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் பெண்ணிடமிருந்து தங்கச் செயின் பறிப்பு - கோவை மாவட்ட செய்திகள்

முகவரி கேட்பதுபோல் நடித்து வீட்டிலிருந்த பெண்ணிடம் தங்கச் செயின் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்க செயின் பறிப்பு
தங்க செயின் பறிப்பு

By

Published : Dec 4, 2021, 11:08 AM IST

கோவை: ராஜ் விஜயநகர் பகுதியில் வசித்துவருபவர்கள் ஹரிராம பிரசாத் - வாசுகி தம்பதி. நேற்று (டிசம்பர் 3) மதியம் வாசுகி தனது அம்மா சரஸ்வதி, குழந்தையுடன் வீட்டிலிருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் முகவரி கேட்பதுபோல் பேசிக்கொண்டு திடீரென வாசுகி, அவரது அம்மாவை மிரட்டி 7.5 பவுன் தங்க தாலிக் கொடியைப் பறித்துச் சென்றனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து அவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மதுக்கரை காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:காரில் வந்து கவரிங் நகை பறித்த கும்பல்... அதிரடி கைது!

ABOUT THE AUTHOR

...view details