பொள்ளாச்சியில் இருந்து கோயம்புத்தூருக்குச் சென்ற அரசுப்பேருந்து, தாமரைக்குளம் என்னும் பகுதியில் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்! - காவல் துறை
கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் சென்ற அரசு பேருந்து கவிழ்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து
விபத்து ஏற்பட்டிருந்த சாலையில் பொதுமக்கள் உடனே வருகை தந்து விபத்துக்குள்ளானவர்களை மீட்க உதவினர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாலையில் ஏற்பட்ட விபத்தால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.